தமிழக இளைஞர் காங்கிரசுக்கு 2 மாதத்தில் தேர்தல்: ராகுல் காந்தி
தமிழக இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதில், இளைஞர் காங்கிரசை பலப்படுத்துவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தலைவர்களை நியமிப்பதற்கு பதிலாக ஜனநாயக ரீதியில் (தேர்தல் முறையில்) தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பஞ்சாயத்து அளவில் கூட நடந்து உள்ளது.
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தல் நடத்தப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி ஆலோசிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகம் விரைவில் விரைவில் இளம் எம்.பி.க்களின் கூட்டத்தை கூட்ட இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.