வடமேற்கு இந்தியாவில் மழை குறையும்

வெள்ளி, 10 ஜூலை 2009 (11:15 IST)
வடமேற்கு இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் ஒரு சில பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருக்கிறார்.

என்றாலும் நாட்டின் மத்தியப் பகுதியில், அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரமாக பெய்யக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, குஜராத்தில் கனமழை பெய்யும் என்றும் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்த ஆண்டு மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் பவார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்