பட்ஜெட்: பாஜக; இந்திய கம்யூ. குற்றச்சாற்று

திங்கள், 6 ஜூலை 2009 (16:19 IST)
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்துள்ள 2009-10ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வழக்கமான ஒன்றாக உள்ளது என்று பாஜக குறைகூறியுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் எந்தவித முக்கிய அம்சங்களும் இடம்பெறவில்லை என்றும், உலக பொருளாதார தேக்கநிலையை எதிர்கொள்ள எவ்வித ஆலோசனையில் இல்லை என்றும் புதுடெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

என்றாலும் முன்னாள் ராணுவத்தினருக்கான பதவிக்கேற்ற ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை தாம் வரவேற்பதாகக் கூறினார்.

போதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறியிருக்கிறார்.

முக்கியப் பிரச்சினையான நாட்டின் பொருளாதார பிரச்சினையை சமாளிக்க உண்மையான அம்சங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்