வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10,000 அதிகரிப்பு

திங்கள், 6 ஜூலை 2009 (13:45 IST)
வருமான வரி செலுத்தும் தனிநபர்கள் ஆண்டு வருவாயில் அவர்கள் வரிச்சலுகை பெறுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், வரி விலக்கு பெறுவோரின் ஆண்டு வருவாய் ஆண்கள் எனில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகவும், பெண்கள் எனில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருவாய் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

இது ஏற்கனவே இருந்த உச்சவரம்பைக் காட்டிலும் 15 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும்.

தவிர நேரடி வரி திட்டங்கள் அனைத்தும் நடுத்தர வருவாயை அளிப்பதாக அமையும் என்றும், எவ்வித வருவாய் இழப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்