ராஜ்தாக்கரே நீதிமன்றத்தில் சரண்

திங்கள், 29 ஜூன் 2009 (12:16 IST)
வடஇந்தியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே இன்று கல்யாண் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தமது மனைவியுடன் நீதிமன்றத்திற்கு வந்த அவர், நீதிபதி முன்னிலையில் தாம் சரண் அடைவதற்கான மனுவைத் தாக்கல் செய்தார்.

தன்னை பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவையும் அவர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு பிணைய விடுதலை வழங்கும் முன் நீதிபதிகள் முன்னிலையில் அரசுத் தரப்பு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

ரயில்வே தேர்வு வாரிய தேர்வை எழுத வந்த மாணவர்கள் மீது கடந்த ஆண்டு, ராஜ்தாக்கரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ராஜ்தாக்கரே-விற்கு கீழ் நீதிமன்றம் அளித்த முன் பிணைய விடுதலையை ரத்து செய்ததுடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ராஜ்தாக்கரே ஜூன் மாத இறுதிக்குள் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் இன்று கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்