மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பின் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் சனிக்கிழமையன்று கூடுகிறது.
2 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தேர்தலில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியை மீண்டும் பலப்படுத்தி, விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவ்தற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட எல்.கே. அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எதிராக பாஜக அதிருப்தி தலைவர்கள் சிலர் விமர்சித்து வருவது, மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி இடையேயான மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளும் இந்தக் கூட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
உட்கட்சி விவகாரங்களை பத்திரிகைகளுக்கு சில தலைவர்கள் பேட்டியளிப்பது குறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கவலை வெளியிடுவார் என்று தெரிகிறது.