ஜார்க்கண்டில் கண்ணிவெடி தாக்குதல்: 11 காவலர்கள் பலி

புதன், 10 ஜூன் 2009 (13:27 IST)
ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 11 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள சரன்டா காட்டுப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விட்டு, அம்மாநிலத்தின் சிங்பும் மாவட்டத்தில் உள்ள செரிங்டா-அருஅங்கா கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரும், உள்ளூர் காவலர்களும் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வாகனத்தைக் குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல்படை இன்ஸ்பெக்டர் உட்பட 11 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அம்மாநில டி.ஜி.பி. ராம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 6 காவலர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்