பாஜக மூத்த தலைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி, மும்பை மடோஸ்ரீ பகுதியில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.
மும்பை சிவாஜி பூங்காவில் பாஜக- சிவசேனா இணைந்து பேரணி நடத்தவிருக்கும் நிலையில், அத்வானியை தமது இல்லத்திற்கு வருமாறு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்ததாக பாஜக மகாராஷ்டிர மாநில பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.
கடந்த முறை அத்வானி மும்பைக்கு வந்த போது பால் தாக்கரே உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வந்ததால், அவரை அத்வானி சந்திக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.