இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட தயார்: காங்கிரஸ் அறிவிப்பு
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (09:38 IST)
மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்றும் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான அபிசேக் மனு சிங்வி, இடதுசாரிகள் தான் எங்களை விட்டு விலகி விட்டனர். நாங்கள் அவர்களை விட்டு விலகவில்லை என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து யாரையும் காங்கிரஸ் நீக்கவில்லை என்று தெரிவித்த சிங்வி, எனவே, காங்கிரஸ் கூட்டணியில் சேருவது குறித்து அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மதவாத சக்திகளை விரட்ட அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்று சேருவது அவசியம் என்றும் தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.