குடியரசுத் தலைவர் மகாராஷ்டிரா பயணம்

சனி, 7 பிப்ரவரி 2009 (12:27 IST)
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றார்.

எஸ்என்டிடி பெண்கள் பல்கலைக்கழகத்தின் 58ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவில் குடியரசுத் தலைவருக்கு டி லிட் பட்டம் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்குகிறார்.

உலக விபாசன பகோடா நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர், நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் சஜ்ஜன் புஜ்பால் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

திங்கட்கிழமையன்று மனோகர்பாய் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனர் தின விழாவில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்கிறார். அங்கு கணினி மையம் ஒன்றையும் திறப்பதுடன், பொறியியல் கல்லூரியில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் அவர் வழங்குகிறார்.

அன்றைய தினமே மற்றொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்திக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்