புதுடெல்லிக்கு வந்த தனியார் விமானத்தை கடத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் விசாரணைக்குப் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் மட்டுமே விசாரணைக்காக தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜெய்ப்பூர் அருகே பறந்து கொண்டிருந்த போது, விமானத்திற்குள் இருந்த ஒரு பெண் உட்பட 2 பேர் விமானத்தைக் கடத்தப்போவதாக பணிப் பெண்களை மிரட்டினர்.
இதையடுத்து விமானம் அவசரமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதுடன், மிரட்டல் விடுத்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் 2 பேரை விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர். மேலும், அவர்கள் மது அருந்தியிருந்தனரா என்பதை உறுதிசெய்யும் மருத்துவ அறிக்கை கிடைக்க காத்துக் கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.