மே. வங்கம்: ஏடிஎம்-களில் ரூ. 16 லட்சம் மாயம்

திங்கள், 2 பிப்ரவரி 2009 (12:04 IST)
மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் 2 தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தில் (ஏடிஎம்) இருந்து 16 லட்சம் ரூபாய் மாயமாகி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம்-மிலும், சுற்றுலா விடுதி பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்-மிலும் இருந்து பணம் மாயமாகிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்யஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

இது கடந்த 26 ஆம் தேதி நடந்திருப்பதாகவும், ஏடிஎம் எந்திரங்கள் உடைக்கப்படவில்லை என்ற போதிலும், அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் இந்தப் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி அந்த ஏடிஎம்-களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

காவல்துறையினருடன் இணைந்து வங்கி நிபுணர்களும் கூட்டு விசாரணை மேற்கோண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்திரங்கள் உடைக்கப்படாத நிலையில், 16 லட்சம் ரூபாய் எப்படி திருட்டுப் போனது என்பது குறித்தும், கணக்குகளில் எவ்வாறு அந்தப் பணம் இடம்பெற்றுள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாரத் ஸ்டேட் வங்கியின் மால்டா முதுநிலை மேலாளர் சமீர் சக்ரவர்த்தி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்