அந்தமான் தீவுப் பகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இமாச்சலப் பிரதேசத்தில் காலை 8.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவானதாகவும், இது அட்ச ரேகையில் இருந்து வடக்கே 32.5 டிகிரி, தீர்க்க ரேகையில் இருந்து கிழக்கே 75.9 டிகிரியில் மையம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், அந்தமான் தீவுப் பகுதியில் இன்று காலை 9.57 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து கிழக்கே 254 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 26.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.