நவீன் சாவ்லாவை நீக்க கோபால்சாமி பரிந்துரை

சனி, 31 ஜனவரி 2009 (10:57 IST)
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவியில் இருந்து நீக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, குடியரசு‌த் தலைவரு‌க்கு பரிந்துரைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நவீன் சாவ்லா நடந்து கொண்டதாகக் பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நீக்க குடியரசுத் தலைவருக்கு கோபால்சாமி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கோபால்சாமியை தொடர்பு கொண்டு கேட்ட போது, எனது கடமையைச் செய்துள்ளேன். இதுபற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறினார்.

கடந்தாண்டு மே மாதம் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக நவீன் சாவ்லா மீது குற்றச்சாற்றுகள் எழுந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

வரும் ஏப்ரல் 20ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து கோபால்சாமி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்