கான்பூரில் காந்தி சிலை உடைப்பு; பதற்றம்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:45 IST)
மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பூங்கா ஒன்றில் காந்தியின் உருவச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கோவிந்தநகர் பகுதியில் உள்ள பூங்காவில் இருந்த மகாத்மாவின் சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி விட்டு தப்பியோடி விட்டதாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி சுரேந்திர திவாரி தெரிவித்தார்.

As news spread about the damaged statue people gathered there and demanded arrest of the accused leading to tension in the area, he said.

காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் பூங்கா முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சேதப்படுத்தப்பட்ட சில அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

அந்த இடத்தில் புதிய காந்தி சிலை நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்