இந்தியா வருகிறார் பான்-கி-மூன்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:47 IST)
ஐக்கிய நாடுகள்: புதுடெல்லியில் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கும் 2009க்கான ஆதாரம் சார்ந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

பாகிஸ்தானுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி செல்லும் பான்-கி-மூன், அந்நாட்டுத் தலைவர்களுடன் பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். இதையடுத்து புதுடெல்லியில் நடக்கும் ஆதாரம் சாந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் அவர் பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாடு பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஆனால் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பான்-கி-மூன் எப்போது இந்தியா வருகிறார் என்று தெரிவிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்