புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் ஓய்வெடுத்து வரும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அடுத்த சில தினங்களில் வீடு திரும்புவார் என்று பிரதமரின் பத்திரிகை ஆலோசகர் தீபக் சாந்து தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உடல் நிலையில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், உடற்பயிற்சியை அவர் மெதுவாக செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை பிரதமர் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமையன்று பிரதமருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிரதமர் சில தினங்களில் வீடு திரும்புவார் என்று பிரதமருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்ததாக்வும் அவர் கூறினார்.
வழக்கமான உணவுவகைகளை பிரதமர் சாப்பிடத் தொடங்கியிருப்பதாகவும், பார்வையாளர்கள் யாரும் பிரதமரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.