முதல் நாளான 12ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தின் மைய அரங்கத்தில் நடக்கும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத் தொடரானது, தற்போதைய 14ஆவது நாடாளுமன்றத்தின் 15ஆவது கூட்டத் தொடர் ஆகும். இந்த கூட்டத் தொடர் 26ஆம் தேதி வரை இரண்டு வார காலம் நீடிக்கும். இது தொடர்பாக, மக்களவைச் செயலகம், மாநிலங்களவைச் செயலகம் ஆகியவற்றில் இருந்து தனித்தனி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், இதுவே 14ஆவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.