பொது விநியோகத்திற்கு 50 லட்சம் டன் சர்க்கரை ஒது‌க்‌கீடு

வெள்ளி, 16 ஜனவரி 2009 (19:48 IST)
நட‌ப்பு‌க் காலா‌ண்டி‌ல் பொது ‌வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ற்காக 50 ல‌ட்ச‌ம் ட‌ன் ச‌ர்‌க்கரையை ம‌த்‌திய அரசு ஒது‌க்‌கீடு செ‌ய்து‌ள்ளது.

உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கு‌றி‌த்து ம‌த்‌திய அரசு ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:

உணவு தானியங்கள் : 2007-08-ம் ஆண்டு காலத்தில் 30.09.2008 வரை 284.91 லட்சம் டனஅரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதகடந்ஆண்டைவிட 13.48 சதவீதம் அதிகம். கடந்த 2006-07-மஆண்டில் ஒட்டுமொத்த கொள்முதல் 251.07 லட்சம் டனமட்டுமே ஆகும்.

2008-09-ம் ஆண்டின் காரீப் பருவநிலை காலம் 01.10.2008 முதலதுவங்குகிறது. இந்த 2008-09-ம் ஆண்டில் 14.01.2009 வரை 177.25 லட்சம் டனஅரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகமாகும். கடந்ஆண்டு இதே காலத்தில் 150.98 லட்சம் டனமட்டுமே கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போதுமான உணவு தானியங்கள் கையிருப்பு : 01.04.2009 அன்று 98.97 லட்சம் டன்கள் கோதுமை கையிருப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 30 லட்சம் டன்கள் கோதுமை கையிருப்பு வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல 01.10.2009 அன்று அரிசி 65.94 லட்சம் டன்கள் கையிருப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதி நிலை : கடந்த 2007-08-ம் ஆண்டில் (ஏப்ரல் - ஜனவரி வரை) பாசுமதி அல்லாத மற்றும் பாசுமதி அரிசி முறையே 47.62 லட்சம் டன்கள் மற்றும் 8.68 லட்சம் டன்களில், 7.44 லட்சம் டன்கள் பாசுமதி அல்லாத அரிசியும் 7.60 லட்சம் டன்கள் பாசுமதி அரிசியும் மட்டுமே (11.01.2009 வரை) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை : கடந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் (ஜனவரி - மார்ச் 2008 வரை) 44 லட்சம் டன்கள் சர்க்கரை மட்டுமே பொது விநியோக முறையில் விநியோகிக்கப்பட்டது. இந்த ஆண்டு (ஜனவரி - மார்ச் 2009) சுமார் 50 லட்சம் டன்கள் விநியோகித்திற்கு வழங்கப்படும். அதாவது ஜனவரி மாதம் 17 லட்சம் டன்களும் பிப்ரவரி மாதம் 16 லட்சம் டன்களும் மார்ச் மாதம் 17 லட்சம் டன்களும் மொத்தம் 50 லட்சம் டன்கள் சர்க்கரை விநியோகித்திற்கு வழங்கப்படும். மேலும் 2009 ஜனவரி மாதத்திற்கு 2.01 லட்சம் டன்கள் சர்க்கரை வெளிச்சந்தைக்கு ஒதுக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் : தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மானிய விலை சமையல் எண்ணெய் விநியோகிக்கப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்காக பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த எண்ணெய் வித்துக்கள் மூலமாக கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், எள்ளு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் மொத்த விலை முறையே 4 சதவீதம், 13.56 சதவீதம், 8.19 சதவீதம், 4.73 சதவீதம் குறைந்துள்ளது.

17.03.2008 முதல் சமையல் எண்ணெய் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் எண்ணெய் வித்துக்கள் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். மேலும் 20.11.2008 முதல் ஐந்து கிலோ அளவுள்ள சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் அதிகபட்சமாக 10 ஆயிரம் டன்கள் வரை மட்டும் 30.10.2009 வரை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. 18.11.2008 முதல் சோயா பீன் எண்ணெய் மீதான சுங்க வரி 0 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்