சிறப்பாக செயலாற்றிய 13 அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுரினாம் குடியரசின் துணைத் தலைவர் ராம்தியன் சர்ஜோ, மொரீசியஸ் குடியரசின் துணைத் தலைவர் அங்கிடி செட்டியார் உள்ளிட்ட 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அயல்நாடுவாழ் இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி இத்தகவலை நேற்று வெளியிட்டார்.
பிரபல நிர்வாகவியல் வல்லுநர் பேராசிரியர் சி.கே. பிரகலாத், இங்கிலாந்தில் முக்கிய அரசியல் பிரமுகராக இருக்கும் ஷிலா ஃப்ளாத்தர், மலேஷிய இந்திய காங்கிரசின் நிரந்தர தலைவர்களில் ஒருவரான ஜி. வடிவேலு, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் சோமன் பேபி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் நேற்று மாலை நடந்த அயல்நாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கினார்.