வேலை நிறுத்த‌ம் செ‌ய்யு‌ம் எண்ணெ‌ய் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை

திங்கள், 5 ஜனவரி 2009 (17:39 IST)
வேலை ‌நிறு‌த்த‌மசெ‌ய்யு‌மஎ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவஅ‌திகா‌ரிக‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7ஆ‌மதேதி முதல் 14 பொதுத்துறை எண்ணெ‌யநிறுவனங்களின் அதிகாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பதாக மத்திய அமை‌ச்ச‌ரசிதம்பரம் தலைமையிலான அமை‌ச்ச‌ர்க‌ளகுழு உறுதி அளித்தும் அதிகாரிகள் ‌திரு‌‌ப்‌தியடைய‌வி‌ல்லை.

இந்நிலையில், எண்ணெ‌யநிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்த‌செ‌ய்தா‌ல் அவர்கள் மீது `எஸ்மா' மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை பாயும் என்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல்., மற்றும் கெயில் ஆகிய எ‌ண்ணெ‌யநிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மதடை விதித்துள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்