புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்: ஸ்தம்பித்தது விமான போக்குவரத்து

வியாழன், 1 ஜனவரி 2009 (11:51 IST)
தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

மும்பை, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புனே ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் உட்பட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காலை நேரத்தில் ஓரளவு பனி மூட்டம் குறைந்ததால், புதுடெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 35 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்