அயல்நாடுகளில் சித்ரவதைக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ புதிய திட்டம்
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (18:15 IST)
அயல்நாடுகளில் இந்திய கணவரால் சித்ரவதைக்குள்ளாக்கப்படும், புறக்கணிக்கப்படும், அயல்நாடுகளில் விவாகரத்து வழக்குகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட, நிதி உதவி அளிக்கப்படும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, கல்ப் டவுன் ஆகியவற்றில் இந்திய பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் அங்கு இத்திட்டம் துவக்கப்படவுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று அளித்த பதிலில் தெரிவித்தார்.