சமிக்ஞை முறையை நவீனப்படுத்த ரயில்வேத் துறை திட்டம் : வேலு தகவல்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (18:14 IST)
நாடெங்கிலும் சமிக்ஞை (‌சி‌‌க்ன‌ல்) முறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை எடுத்து வருவதாக இத்துறையின் இணை அமைச்சரஆர். வேலு தெரிவித்‌தா‌ர்.

மா‌‌நில‌ங்களை‌வி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்து‌ப்பூ‌ர்வமாக ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த அமை‌ச்ச‌ர் இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நடப்பாண்டில் இந்தப் பணிக்காக ரூ.1,530 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். சமிக்ஞை முறையை நவீனப்படுத்துவது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பணியாகும். எனவே, ரயில்வேத் துறை, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய கருவிகளுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தவுள்ளது என்று குறிப்பிட்டா‌ர்.

சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு முறையை நவீனப்படுத்த 2005-06இல் ரூ.1,043 கோடி, 2006 - 07இல் ரூ.1,182 கோடி, 2007-08இல் ரூ.1,345 கோடியு‌ம் செலவிடப்பட்டதாக அமைச்சர் வேலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்