இந்தியாவில் புதிய அணு உலைகள் நிறுவப்படும்: ரஷ்யா!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:08 IST)
இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (Nuclear Suppliers Group-NSG) அனுமதி கிடைத்துள்ளதால், மேலும் பல புதிய அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவோம் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியா வந்துள்ள ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்ஜி ஸ்மட்கோ புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்.எஸ்.ஜி அனுமதியின் மூலம் இந்தியா-ரஷ்யா இடையே அணு சக்தித் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கூடன்குளத்தில் மேலும் புதிதாக அணு உலைகள் நிறுவுவதற்கு இருநாடுகளுக்கு இடையே புதிய ஒப்பந்தம் விரைவில் உருவாக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதில் இந்தியா கையெழுத்திடும் என்றும் செர்ஜி கூறினார்.

அணு சக்தி துறை ஒத்துழைப்பில் சிறப்பான முன்னேற்றத்தை இந்தியா-ரஷ்யா நட்புறவு எட்டியுள்ள அதேவேளையில் இது பன்முகத்தன்மை வாய்ந்த உறவாகத் திகழ்வதாகத் தெரிவித்த செர்ஜி, கூடன்குளத்தில் நடந்து வரும் கூட்டுப் பணிகள், எதிர்காலத்தில் இந்தியா-ரஷ்ய உறவை மேம்படுத்துவதற்கு உதவும் என நம்புவதாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்