சாகும் வரை திபெத்திற்கு போராடுவேன்: தலாய் லாமா!

ஞாயிறு, 23 நவம்பர் 2008 (12:53 IST)
திபெத் மதத் தலைவராக உள்ள தலாய் லாமா விரைவில் பதவி விலகுவார் என்று வெளியான செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தர்மசாலாவில் இன்று செய்தியாளர்களுக்கு தலாய் லாமா அளித்துள்ள பேட்டியில், திபெத் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சாகும் வரை திபெத்தியர்களை வழிநடத்திச் செல்வது எனக்கான தார்மீகப் பொறுப்பாகும்.

எனது உடலும், உயிரும் திபெத்தியர்களுக்கே சொந்தமானது என்று தலாய் லாமா திட்டவட்டமாக கூறினார்.

கடந்த ஆறு நாட்களாக சுமார் 600க்கும் அதிகமான திபெத்திய தலைவர்கள் பங்கேற்ற மாநாடு தர்மசாலாவில் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு பின்னர் தாம் பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு தலாய் லாமா மறுப்புத் தெரிவித்துள்ளார்.