ஆல்வா குற்றச்சாட்டு: விசாரணைக்கு காங். உத்தரவு!

சனி, 8 நவம்பர் 2008 (04:23 IST)
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் விற்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கூறியிருப்பது பற்றி விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கட்சித் தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தனது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்கள் சீட் விற்கப்படுவதாக வியாழனன்று ஆல்வா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் தேர்தல் உத்திகளை காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் முடிவு செய்வதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து மார்கரெட் ஆல்வாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பி கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு, இதுபற்றி விசாரணை நடத்தி 3 நாட்க்களில் அறிக்கை அனுப்புமாறும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்