அஸ்ஸாம் கவுஹாத்தியில் சில தினங்களுக்கு முன் மூன்று இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 80 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகள் மூன்று மாருதி கார்களில் ஒவ்வொரு காரிலும் 20 முதல் 30 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை ஏற்றி வந்து, இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாமில் கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களில் ஆர்டிஎக்ஸ் அல்லாத பிற வெடிபொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதே முதல் தடவையாகச் சக்தி வாய்ந்ததும், அதிக எடை கொண்டதுமான ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.