டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஞாயிறு, 2 நவம்பர் 2008 (04:31 IST)
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு வருகிற 29ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் அருண் ஜெட்லி டெல்லியில் வெளியிட்டார்.
இதில் 53 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகுமார் மல்கோத்ரா, கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியான அகாலிதளத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கும் போட்டியிடுபவர்களின் பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் குழு ஓரிரு நாட்களில் முடிவு செய்யும் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.