நாடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (01:25 IST)
ஜப்பான், சீனாவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த பிரதமர் மன்மமோகன் சிங் நேற்றிரவு நாடு திரும்பினார்.

ஜப்பானில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை பீஜிங் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு நடைபெற்ற ஏழாவது ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.

நேற்று மதியம் ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாடு நிறைவடைந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் விமானம் மூலமாக நேற்றிரவு டெல்லி வந்தடைந்தார்.

ஆசிய-ஐரோப்பிய கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவை சந்தித்துப் பேசினார்.

உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற-இறக்க நிலை, எரிசக்தி பாதுகாப்பு, தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து சீன அதிபருடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அதிபருமான ஹூ ஜிண்டாவை பிரதமர் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்