சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சித்திரை ஆட்ட விசேஷ திருநாள் என்ற சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்தாண்டுக்கான பூஜை வரும் 28ஆம் தேதி நடக்கிறது.
இதற்காக சபரிமலை கோயில் நடை நாளை (27ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் திறக்கப்படுகிறது. பின்னர் 28-ந் தேதி பூஜைகள் அனைத்தும் முடிந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை மற்றும் மாளிகைபுரத்தில் மேல்சாந்திகளாக இருப்பவர் தங்களது பணிகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்திகள் நவம்பர் 16ஆம் தேதி முதல் பூஜைகள் செய்ய தொடங்குவர். மண்டல பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.