தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ரூ.1,734 கோடி ‌நி‌தி : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:59 IST)
தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்து‌ள்ளது எ‌ன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் சாஹு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு ப‌தி‌லஅ‌ளி‌த்அவ‌ர், வயதானவர்களுக்கான இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), தேசிய குடும்பநலத் திட்டம் (NFBS) ,அன்னபூர்ணா திட்டம் ஆகியவை அடங்கிய தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு (NFBS) மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

தேசிய சமுதாய உதவித் திட்டத்தி‌ன் ‌கீ‌ழ் 2008-09 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்து‌ள்ளதஎ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்