ராஜ் தாக்கரே-க்கு எதிராக கைது உத்தரவு

திங்கள், 20 அக்டோபர் 2008 (17:45 IST)
மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

ராஜ் தாக்கரே-க்கு எதிராக பீகார் மாநிலத்தவர்களுக்கு எதிராக கண்ணியக் குறைவாக கருத்து வெளியிட்டதாகக் கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) 17-ஆம் தேதிக்கு முன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி ஏ.கே. திவாரி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மும்பை காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிறப்பித்துள்ள கைது உத்தரவு இன்று தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.

முன்னதாக ஹமீது கான் என்ற வழக்கறிஞர், ராஜ் தாக்கரேவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வுகளை ராஜ்தாக்கரே புண்படுத்தி விட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரைக் கைது செய்வது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா பொதுச் செயலாளர் சர்போதர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்