போர் நிறுத்த மீறல் இல்லை!-இந்தியா-பாக் உறுதி!

வியாழன், 16 அக்டோபர் 2008 (23:18 IST)
இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடைபெறுவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் கவலை அடைந்துள்ள நிலையில், இனி போர் நிறுத்த மீறல்கள் கிடையாது என்றும் 4 ஆண்டு கால நம்பிக்கை வளர்ச்சி ஒப்பந்தத்திற்கு குந்தகம் ஏற்படாது என்றும் இருதரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.

இரண்டு நாடுகளின் எல்லைக்காவாலர்களும் எல்லைத் தூண்களை இணைந்து சரிபார்த்து பழுது செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற கூட்டத்தில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறமாடோம் என்று இரு தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் கூடுதல் தலைமை ஆய்வாளர் பன்சலும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் அதிகாரி ஜெனரல் முகமது யாகூப் கானும் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது சமீபமாக போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடைபெற்றதாக ஒப்புக் கொண்டனர்.

இந்த விவகாரத்தை இந்திய அரசு பாகிஸ்தானுடன் உயர் மட்ட அளவில் விவாதித்தது. மேலும் இது போன்ற மீறல்கள் தொடர்ந்தால் எதிர்கால உரையாடல் பிரச்சனைக்குள்ளாகும் என்று இந்தியா தனது கவலைகளை பாகிஸ்தானிடம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இரு நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினரும் உறுதி அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்