குவின்டால் நெல்லுக்கு ரூ.50 கூடுதலாக வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
வியாழன், 16 அக்டோபர் 2008 (17:35 IST)
நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ஊக்கத்தொகை போனஸாக ரூ.50 கூடுதலாக வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ரூ.50 கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக போனஸாக வழங்கப்படும் இந்த கூடுதல் தொகை 2008-09ஆம் ஆண்டின் காரீப் விற்பனை சீசன் முழுவதும் வழங்கப்படும்.