ஜெட் ஏர்வேய்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:11 IST)
டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் முன்பு, தனியார் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விமான நிலைய நுழைவு வாயில் முன்பு குவிந்த அவர்கள் கிங்பிஷர் ஏர்லைன் சேர்மன்களான நரேஷ் கோயல், விஜய் மல்லையா ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, 1,900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் சிவ் சேனா, மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா போன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்போது அவர்கள் தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக விமான நிலையத்தில் உள்ள ஜெட் ஏர்வேய்ஸ் மைய பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.