உ‌த்தரகாண்டி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 20 பே‌ர் ‌ப‌லி!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:49 IST)
உ‌த்தரகா‌ண்‌டமா‌நில‌த்‌தி‌ல் இ‌ன்று காலை க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து த‌றிகெ‌ட்டு ஓடிய பேரு‌ந்து 500 ‌மீ‌ட்ட‌ர் ஆழ ப‌ள்ள‌த்‌தி‌ல் க‌வி‌ழ்‌ந்து ஏ‌ற்ப‌ட்ட கோர ‌விப‌த்‌தி‌ல் அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 20 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 20 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌‌ர்.

டெஹ‌்‌ரி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் இரு‌ந்து ட‌ர்‌கிலா எ‌ன்ற இட‌‌ம் நோ‌க்‌கி சுமா‌ர் 40 பயண‌கிளுட‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த இ‌ந்த பேரு‌ந்து இ‌ன்று காலை 11 ம‌ணியள‌வி‌ல் ‌‌ரி‌ஷிகே‌ஷ்-ச‌ம்பா ரா‌ஜ்ம‌‌ர்‌க் அருகே வ‌ந்த போது க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்ததா‌ல் சாலை‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌‌கி அரு‌கிலு‌ள்ள 500 ‌மீ‌ட்ட‌‌ர் ஆழமு‌ள்ள ப‌ள்ள‌த்‌தி‌ல் க‌வி‌ழ்‌ந்தது.

இ‌ந்த ‌வி‌ப‌த்‌தி‌ல் பேரு‌ந்‌‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 20 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 20 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இதையடு‌த்து காவ‌ல்துறை‌‌ ம‌ற்று‌ம் ‌‌மீ‌ட்பு குழு‌வின‌ர் ‌‌நிக‌ழ்‌விட‌த்து‌க்கு விரை‌ந்து வ‌ந்து காயமடை‌ந்தவ‌ர்க‌ளை ‌மீ‌ட்டு அரு‌கிலு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌த்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் பலரது ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளதா‌கவு‌ம் இதனா‌ல் ‌ப‌லி எ‌ண்‌‌ணி‌க்கை மேலு‌ம் அ‌திக‌ரி‌க்க‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன‌.

வெப்துனியாவைப் படிக்கவும்