போர் நிறுத்த மீறல் அமைதி முயற்சிகளை குலைத்துவிடும்: பாகிஸ்தானிடன் இந்தியா கவலை!
திங்கள், 13 அக்டோபர் 2008 (17:55 IST)
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளும் கடைபிடித்துவரும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் தேச பாதுகாப்பு ஆலோசகர் மாமூத் அலி துராணியிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், எல்லைப் பகுதியில் இந்தியப் படைகளை நோக்கி பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும், பீரங்கித் தாக்குதல் நடத்துவதும் பயங்கரவாதிகளின் ஊடுறுவலிற்கு வழி வகுப்பதற்கே என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாகிவிடும் என்பதையும் நாராயணன் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஃப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்கும் தனது பலத்த கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது.