ஒரிசா அரசு நீக்கப்படுமா? இன்று முடிவு!

புதன், 8 அக்டோபர் 2008 (13:19 IST)
தலைநக‌ர் புது டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்ட‌த்‌தி‌ல் ஒரிசா அரசை பதவி நீக்கம் செய்வது குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி படுகொலையைத் தொடர்ந்து ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை பரவியதை அடுத்து மத்திய அரசு, ஒரிசாவில் ஆளும் பிஜு ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஒரிசா நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பும்படி ஆளுநர் எம்.சி. பாண்டரேவை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. ஒரிசா நிலவரம், அசாம் வன்முறை குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

ஒரிசா அம்மாநில அரசை பதவி நீக்கம் செய்வது குறித்து இன்றையக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வது குறித்தும் இதில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்