யமுனையில் வெள்ளம் 24 ரயில்கள் திசை திருப்பம்!

யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வடக்கு ரயில்வே சுமார் 24 ரயில்களின் பாதையை மாற்றியுள்ளது. சுமார் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

யமுனை நதியில் வெள்ளம் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் பழைய யமுனை பாலம் மூடப்பட்டுவிட்டது. இதனால் அதிகாலை 3.00 மணியிலிருந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

26 ரயில்கள் மாற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது, 27 ரயில்கள் அது புறப்படவேண்டிய இடத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு புறப்பட்டுள்ளன. 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யமுனை நதியில் நீர்வரத்து அதிகரித்து நீரின் அளவு அபாயக்கட்டத்தைத் தாண்டியுள்ளது. சுமார் 4 லட்சம் கன அடி நீர் மேற்கு யமுனை நதிக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்