ரூ.40 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சென்னைவா‌சி உள்பட 6 பேர் கைது!

புதன், 17 செப்டம்பர் 2008 (19:31 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌லநட‌த்த‌ப்ப‌ட்சோதனை‌யி‌லூ.40 கோடி ம‌தி‌ப்பு‌ள்போதை‌பபொரு‌ட்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளன. இததொட‌ர்பாசெ‌ன்னையை‌சசே‌ர்‌ந்தவ‌ரஉ‌ட்பட 6 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

ஆம்பீட்டாமைன், மீத்தாம்பீட்டாமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ஈபெட்ரின் போதைப் பொருள் ஆந்திராவில் ஐதராபாத், நெல்லூர் ஆகிய இடங்களில் அதிகளவில் தயாரிக்கப்படுவதாக ஐதராபாத் மண்டல வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடு‌த்தஐதராபாத்தில் உள்ள தனியார் மருந்துப் பொருள் ஆய்வுக்கழகம் உள்பட 6 இடங்களிலும் நெல்லூரில் உள்ள தொழிற்கூடத்திலும் கடந்த 15, 16-ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐதராபா‌த்தில் 100 கிலோ ஈபெட்ரின், 5 கிலோ அசிடிக் அன்ஹைட்ரைடு, ரூ.52 லட்சம் ரொக்கம் ஆகியவையும், நெல்லூரில் 700 கிலோ ஈபெட்ரின், 850 கிலோ அசிடிக் அன்ஹை‎ட்ரைடு, 20 ஆயிரம் கிலோ சூடோ ஈபெட்ரின் ஆ‌கியவையு‌மகைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியாகும்.

இது தொடர்பாக‌ப் பலரிடம் நட‌த்த‌ப்ப‌ட்விசாரணை‌யி‌லபோதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஐதராபாத், மும்பை, சென்னை நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்