நடப்பாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் ரயில்வேத் துறை ரூ.32,303.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.27,246.71 கோடி) ஒப்பிடுகையில் இது 18.56 விழுக்காடு கூடுதலாகும்.
சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ரூ.18,284.60 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.22,029.40 கோடி மட்டுமே. இது 20.48 விழுக்காடு கூடுதலாகும்.
ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ஏப்ரல் 1ஆம் தேதி தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ரூ.9,054.73 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 15.18 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.7,861.58 கோடி மட்டுமே கிடைத்தது.
நடப்பாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சுமார் 294 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 6.51 விழுக்காடு கூடுதலாகும்.