இந்தியாவிற்கு வருமாறு முஷாரஃப்பிற்கு அழைப்பு!
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:41 IST)
ஓய்வு காலத்தைக் கழிக்க வருமாறு முஷாரஃப்பிற்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங் என்பவர், முஷாரஃப் தனது ஓய்வுக் காலத்தைக் கழிக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என்று கூறினார்.
முஷாரஃப்பிற்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை உள்ளிட்டவற்றைத் தர தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முஷாரஃப்பும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால், அவரை வரவேற்கத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள பல்தேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரஃப்பிற்கு ஆதரவு இல்லை என்றாலும், அவர் மீது இந்தியர்கள் நிறைய அன்பு வைத்துள்ளார்கள் என்றார்.