பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரெங்கராஜன் ராஜினாமா!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:05 IST)
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக இருக்கும் சி. ரெங்கராஜன் திடீரென தனது பதவியை ரா‌ஜினாமா செய்துள்ளார்.

இந்த பதவியில் இருந்து ராஜினமா செய்திருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ரா‌ஜினாமா செய்திருப்பதற்கான காரணத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

சிறந்த பொருளாதார நிபுணரான சி.ரெங்கராஜன் 1992-97ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார்.

இவர் தற்போது ஆந்திர மாநில கவர்னராகவும், திட்டக்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.

இவரின் தலைமையில் உள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, இந்த நிதி ஆண்டின் பொருளாதார அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் கொடுக்க உள்ளது.

இந்நிலையில் இந்த குழுவின் தலைவர் பதவியில் இருந்து ரெங்கராஜன் ரா‌ஜினாமா செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்