வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்க த்தையடுத்து பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள் பயந்து ஜன்னல்கள் வழியாக குதித்துள்ளனர். இதனால் சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இரவு 12.52 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. டாக்காவில் இருந்து வடகிழக்கே 238 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, நேற்று இரவு திரிபுரா மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.8 ஆக பதிவாகியுள்ளது!
நேற்று இரவு 12.20 ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தீர்க்க ரேகை 24.8 டிகிரி வடக்கும், அட்ச ரேகை 90.6 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இந்திய-வங்கதேச எல்லையில் மையம் கொண்டிருந்ததாக ஷில்லாங் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.