சோம்நாத் சாட்டர்ஜியுடன் மன்மோகன்சிங் சந்திப்பு!

வியாழன், 24 ஜூலை 2008 (10:48 IST)
க‌ட்‌சிய‌ி‌‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ம‌க்களவை‌ தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜியை ‌அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌சி‌ங் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக ம‌க்களவை தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சாட்ட‌ர்‌‌‌ஜியை பதவியில் இருந்து ‌விலகுமாறு‌ம் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடும்படி கட்சி தலைமை கட்டளையிட்டது. ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. இதையடு‌த்து, அவரை க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கட்சி நீக்கியது.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் திடீரென இன்று காலை சோம்நாத் ாட்டர்ஜியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
அவரை பிரதமர் சந்தித்தது ஏன் என்பது தெரியவில்லை.

கட்சியில் இருந்து நீக்கி இருப்பதால் சோம்நாத் ாட்டர்ஜி, ம‌க்களவை தலைவ‌ர் பதவி‌யி‌ல் இரு‌ந்து ‌விலக முடிவு செய்திருக்கலாம். அவரை சமாதானப்படுத்தவே மன்மோகன்சிங் சந்தித்து இருக்கலாம் என்று தெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்