மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய்: மத்திய அரசு பரிசீலிக்கும்!
புதன், 23 ஜூலை 2008 (21:01 IST)
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற ஏன் முயற்சிக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று அரசின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமேன் கூறினார். கம்பன் எழுதிய ராமாயணத்தின் படி தனது மனைவி சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல ராமர் கட்டிய பாலத்த ை, திரும்பி வரும்போது அவரே இடித்து விட்டார். எனவே குறிப்பிட்ட இடத்தில் எந்தப் பாலமும் இல்லை என்பதால் அரசு பாலம் எதையும் இடிக்கவில்லை என்றும் தனது வாதத்தில் வழக்கறிஞர் நார ிம ேன் கூறினார். மேலும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை பூர்த்தி செய்வதற்க ு, தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள பாதையைத் தவிர்த்து மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையையும் நார ிம ேன் ஏற்றுக்கொண்டுள்ளார். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன ், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன ், ஜெ.எம். பாஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வ ு, இத்திட்டத்தைச் செயல்படுத்துகையில ், நம்பிக்கையைக் காயப்படுத்தாமலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமலும் இரண்டிற்கும் தகுந்தாற்போல நடந்துகொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் நார ிம ேனுக்கு ஆலோசனை வழங்கியது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏராளமான மாற்றுப் பாதைகள் உள்ள நிலையில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்த ு, ராமர் பாலம் என்றழைக்கப்படும் பகுதியை மட்டும் இடிப்பதற்கு முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ரவீந்திரன ், ஒன்றுமே இல்லாத இடத்தில் பிரச்சனையை உருவாக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம் என்று வழக்கறிஞர் நார ிம ேனைக் கேட்டுக்கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர் நார ிம ேன ், இதுபற்றித் தீவிரமாகப் பரிசீலிக்கும்படி மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குவதாகப் பின்னர் உறுதியளித்தார். அதேநேரத்தில ், ராமர் பாலம் என்றழைக்கப்படும் பகுதி வழிபாட்டுத்தலம் அல்ல என்றும் அதை யாரும் வழிபடுவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ராமேஸ்வரம் துறைமுகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதையைச் சிறிது மாற்றிக்கொள்வதால் மக்களின் நம்பிக்கை காக்கப்படும் என்றால ், அதைச் செய்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. "அறிவியல்பூர்வமா க, தொழில்நுட்பரீதியா க, பொருளாதாரரீதியாக மற்றும் மிக முக்கியமாக அரசியல் ரீதியா க" பாதிப்பில்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதையை சிறிது மாற்றிக்கொள்வது பற்றி மத்திய அரசு தரப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக மனுதாரர்களான முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணி சாம ி, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள ், ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும ், ராமர் பாலத்தை சேதப்படுத்தவோ இடிக்கவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தங்களின் வாதத்தை முடித்துக்கொண்டனர். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 8 மாற்று வழித்தடங்கள் உள்ள நிலையில ், எந்தவித நியாயமுமின்றி ராமர் பாலத்தை இடிப்பதற்கு உண்டான வழித்தடத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்றும ், ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதை கண்டறிய இதுநாள் வரை எந்த ஆய்வையும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மேற்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
செயலியில் பார்க்க x