நம்பிக்கை வாக்கெடுப்பு: 11 எம்.பி.க்கள் புறக்கணிப்பு?

செவ்வாய், 22 ஜூலை 2008 (11:51 IST)
மக்களவையில் இன்று மாலை நடைபெறும் ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை 11 நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு.கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பா.ஜ.க, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஐ.மு. கூட்டணி அரசுக்கு எதிராக கட்சிகளில் உள்ள 11 நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌‌ர்க‌ள், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்க மனம் இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ள நிலையில், இன்று மேலும் 11 நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது ஐ.மு.கூட்டணி அரசுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்