கண்காணிப்பு ஒப்பந்தத்தின் முழு விவரத்தையும் பகி‌ர்‌ந்துகொ‌ள்ள முடியாது - பிரணாப்!

செவ்வாய், 8 ஜூலை 2008 (18:26 IST)
பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) உடனான நடைமுறைகள் முழுமையடைந்த பின்னரே கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பான முழு விவரத்தையு‌ம் பகிர்ந்துகொள்ள முடியும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர‌சி‌ற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டது கு‌றி‌த்து ப‌தில‌ளி‌த்து‌ள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை உடனான கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்த சுரு‌க்கமான விவரங்கள் ஏற்கனவே இடதுசாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த முழு விவர‌த்தையு‌ம் தெரிந்துகொள்ள இடதுசாரிகள் விரும்பினால், மத்திய அரசுடன் இணைந்து அதனை தெரிந்து கொள்ளட்டும்" என்று கூறியுள்ளார்.

"பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான நடைமுறைகள் முடிவடை‌ந்த ‌பிறகுதா‌ன் கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்த முழு விவர‌த்தையு‌ம் மூ‌ன்றா‌ம் நப‌ர்களுட‌ன் (அர‌சி‌ற்கு வெ‌ளி‌யி‌ல் உ‌ள்ள க‌ட்‌சிக‌ள்) கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ள முடியு‌ம்" என்று பிரணாப் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்