சரக்கு போக்குவரத்து மூல‌ம் ரயில்வே‌க்கு கூடுதல் வருமானம்!

புதன், 18 ஜூன் 2008 (16:05 IST)
சரக்கு போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் 10.8 சதவீதம் கூடுதலாக வருமான‌ம் கிடைத்துள்ளது எ‌ன்றஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ரயில்வே துறை 2008-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 13.77 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் ரூ.8,996.29 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2007-ம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு போக்குவரத்தின் மூலமாக கிடைத்த ரூ.7,356.79 கோடியைவிட இது 10.87 சதவீதம் அதிகம்.

2008-ம் ஆண்டு மே மாதத்தில் நிலக்கரி போக்குவரத்தின் மூலம்தான் அதிக வருமானம் கிடைத்துள்ளது. 2.95 கோடி டன் நிலக்கரியை எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,617.60 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இரும்புத் தாது ரூ.975.54 கோடி, சிமென்ட் ரூ.375.24 கோடி, உணவு தானியங்கள் ரூ.337.98 கோடி, பெட்ரோலியப் பொருட்கள் ரூ.273.81 கோடி, இரும்பு எஃகு பொருட்கள் ரூ.232.30 கோடி, உரங்கள் ரூ.167.90 கோடி, எஃகு தொழிற்சாலைக்கான மூலப் பொருட்கள் ரூ.70.65 கோடி, கன்டெய்னர் சேவை மூலமாக ரூ.180.03 கோடி, இதர சரக்குகள் மூலமாக ரூ.365.58 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்